About Us

சிதம்பரம் ராமலிங்கம் அறக்கட்டளை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க பசிப்பிணி போக்குவது பரம புண்ணியம் பசித்த உயிர்களை தேடிச் சென்று உணவு அளித்தால் பாவங்கள் தீரும் சாபங்கள் விலகும் வாழ்வில் வளம் பெருகும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை திருவொற்றியூர் டோல்கேட் சாத்துமா நகர் நம்பர் 4 எம் ஜி ஆர் சாலை என்கிற முகவரியில் உள்ள வள்ளலார் பழமுதிர்சோலையில் வள்ளலார் சபை மூலம் முதலில் மாலை நேரத்திலும் கொரோனா காலத்திலும் அதற்கு பின்னரும் மதியம் உணவு நேரத்திலும் வள்ளலாருக்கு குருபூஜை செய்து அன்னதானம் செய்து வந்தோம் மேலும் ஏழை எளியோருக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மருத்துவமனைகளின் உதவியோடு இலவச கண் சிகிச்சை முகாம் இலவச பொது மருத்துவ முகாம் வேலை வாய்ப்பு முகாம் ஆதரவற்றோர் முதியோர் பராமரிப்பு போன்ற பணிகளை செய்து வருகிறோம் மேலும் புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பல்வேறு அன்பர்களின் உதவியோடு நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உணவு பால் பழங்கள் ரொட்டித் துண்டுகள் துணிமணிகள் போர்வை பெட்ஷீட் போன்றவற்றையும் அளித்து வந்துள்ளோம் மேலும் கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கி உள்ளோம் வள்ளலார் சபை மூலம் இவ்வாறாக பல்வேறு ஆன்மீக சமுதாயம் சார்ந்த அறப்பணிகளை செய்து வருகிறோம் குறிப்பாக தியாகராஜ சுவாமிகள் வடிவுடையம்மன் ஒற்றீஸ்வரர் கோவில் திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கும் தாய்மார்களுக்கும் உணவு அளித்து வருகிறோம் இப்பணிகளில் முத்தாய்ப்பாக அன்பர்களின் கூட்டு முயற்சியால் உருவானது சிதம்பரம் ராமலிங்கம் அறக்கட்டளை இதன் தலைவராக இறையருள் கே கணேசன் ஐயா அவர்களும் துணைத் தலைவராக தயவு திரு என் தீர்த்தானந்தன் ஐயா அவர்களும் செயலாளராக தயவு திரு கே ஜெகதீசன் ஐயா அவர்களும் பொருளாளராக இன்ஜினியர் வி எம் நந்தகோபால் ஐயா அவர்களும் ஒருங்கிணைப்பாளராக இரா அரச ஒளி பிரம்மச்சாரி அவர்களும் மற்றும் பல்வேறு நண்பர்களும் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் குறிப்பாக இந்த அறக்கட்டளை மூலம் பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் மண்ணில் வடிவுடையம்மன் கோயில் கோபுர வாசல் முன்பாக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு அன்னதானம் செய்து வருகிறோம் ஆயிரக்கணக்கானோர் பசியாறி செல்கின்றனர் வெள்ளிக்கிழமை கோயில் நடை சாத்தப்படாது முழு நேரமாக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த அன்னதானத்தில் நமது அறக்கட்டளையை சார்ந்த 25க்கும் மேற்பட்டவர் அன்பர்கள் தொண்டு செய்து வருகின்றனர் மேலும் கல்வி வேலை வாய்ப்பு மருத்துவம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் பராமரிப்பு போன்ற சமூக நலன் சார்ந்த பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம் இந்நிகழ்வுகளுக்கு தங்களால் இயன்ற பொருள் உதவியை பணமாகவோ அரிசி பருப்பு வகைகள் ஆயில் போன்ற மளிகை பொருட்கள் காய்கறிகள் அளித்து வள்ளல் பெருமானார் சொன்னது போல புண்ணியத்தை பாகம் செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம் இந்நிகழ்வுகள் யாவும் தங்களின் ஆதரவில் நடைபெறும் ஒரு கூட்டு முயற்சி தாங்கள் அளிக்கும் பொருட்கள் யாவும் முழுக்க முழுக்க தர்ம காரியத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும் என்கிற உறுதியும் அளிக்கிறோம் தாங்களே நேரடியாக வருகை தந்து வசித்த உயிர்களுக்கு உணவளிப்பதன் மூலம் இரட்டிப்பு பலனை பெறலாம் பசித்த உயிர்களுக்கு உணவளிப்பதன் மூலம் ஆண்டவனின் மனம் குளிர்கிறது இதனால் ஊழ்வினை யால் தொடரும் துன்பத்தை சரி செய்து கொள்ளலாம் என வள்ளலார் அருட்பாவிலே குறிப்பிடுகிறார் மேலும் பட்டினத்தார் ஆதிசங்கர வள்ளல் பெருமானார் போன்ற மகான்கள் திருவடிப்பட்ட இடத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கு தாங்கள் அளிக்கும் பங்களிப்பு தங்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது இதன் மூலம் தங்கள் குடும்பத்தில் அருட் செல்வமும் பொருட் செல்வம் தேக ஆரோக்கியமும் கிடைக்கப் பெற்று தங்கள் பிள்ளைகளின் கல்வி செல்வம் மேல் ஓங்க திருமண வைபவம் மழலை செல்வம் வேலைவாய்ப்பு போன்றவற்றை அடைந்திடவும் இந்த இந்த அண்ணன் தர்மம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெற்று தரும் தங்களின் தொழில் வளம் மேலோங்க குடும்ப ஒற்றுமையுடன் வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் கிடைக்கும் தங்கள் குடும்பத்தில் நடைபெறும் அனைத்து விசேஷ தினங்களுக்கும் பிறந்தநாள் திருமண நாள் புதுமனை புகுவிழா முன்னோர்களின் நினைவு நாள் போன்ற தினங்களில் அன்னதர்மத்தை செய்து இரட்டிப்பு பலன்களை பெறுங்கள் தாங்கள் அளிக்கும் பொருட்செல்வம் அருள் செல்வமாக மாறும் எடுத்து செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம் கொடுத்து உதவுங்கள் தயவு, திருச்சிற்றம்பலம் நன்றி உடையதாகுக இப்படிக்கு சிதம்பரம் ராமலிங்கம் அறக்கட்டளை நம்பர் 50 ஏ நான்காவது தெரு மார்க்கெட் லேன் காலடிப்பேட்டை திருவொற்றியூர் சென்னை 19 மேலும் தொடர்புக்கு கைபேசி எண் +91 89460 70711 , +91 73053 12499